இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் விபச்சாரம் 30 வீதமாக அதிகரிப்பு! “ஸ்டான்ட் ஒவ் மூவ்மெனட் லங்கா” அமைப்பை மேற்கோள்காட்டி ANI செய்தி..
இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்றுமதி தொழில்துறையில் பணியாற்றும் பெண்கள் தொழில் வாய்ப்பை இழந்து விபச்சாரத்தில் தள்ளப்படுவதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் வருமானத்திற்காக விபச்சாரத்திற்குள் நுழைகின்றனர் என ANI தெரிவித்துள்ளது.
22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடியையும் பட்டினி அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையால் உண்டான நெருக்கடி பல குடும்பங்களை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது, பெருமளவு இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்,
உணவையும் அத்தியாவசிப்பொருட்களையும் பெறுவதில் அவர்கள் நாளாந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர். இந்த மோசமான நிலைமை நாட்டில் புதிய விபச்சாரவிடுதிகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது,
வாழ்வாதாரத்திற்காக பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக விபச்சாரம் 30 வீதமாக அதிகரித்துள்ளது என பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஸ்டான்ட் ஒவ் மூவ்மென்ட் லங்கா தெரிவித்துள்ளது.