ஜனாதிபதியின் கொடியில் படுத்திருந்தவர் பொலிஸாரிடம் சரண்..!
இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தி அதில் படுத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ம் திகதி போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டிருந்தது, இதன்போது குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மேலும் ஜனாதிபதியின் கொடியில் படுத்திருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் கொழும்பு வெல்ல பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர் சரணடைந்தார்.