SuperTopAds

எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதத்திற்காக 4 ஆவது சபையின் 52ஆவது கூட்டஅமர்வு வியாழக்கிழமை(28)சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில்  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முதலில் இக்கூட்ட அமர்வு மத அனுஸ்டானத்துடன் இடம்பெற்றதுடன் 2022 ஜூன் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2022 ஜூன்  மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் இடம்பெற்ற போது தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் உரை இடம்பெற்றது.

இவ்வுரையின் போது எரிபொருள் பிரச்சினை  எரிவாயு பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் அதனை தொடர்ந்து திண்மக்கழிவு அகற்றல் ஆளணி காரியாலய ஊழியர்கள் சம்பந்தமாக  பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயற்படுத்தி வருவதாக  கூறினார்.

மேலும்   நிந்தவூர் பிரதேச கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தல் வடிகால்கள் தொடர்பில் ஆராயப்பட்டு  தொடர்ந்து சபை அமர்வில் கடிதங்கள் பிற விடயங்களுடன்  சபை நடவடிக்கைகள் யாவும்  நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.