15 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடி கால்வாயில் விழுந்த திருடன்! கால்வாயில் நீந்திக் கொண்டிருந்ததை தற்செயலாக கண்ட பொலிஸாரிடம் சிக்கினார்..
கால்வாயில் நீந்திக் கொண்டிருந்த நபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பேருந்தில் பயணித்த ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்று கால்வாயில் சிக்கியமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வத்தளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நீர்கொழும்பு - கொழும்பு இடையிலான பேருந்தில் பயணித்த ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கின்றார்.
இதன்போது கால்வாயில் சிக்கி நீந்திக் கொண்டிருந்தபோதே பொலிஸார் கண்டுள்ளனர். இதனையடுத்து குறித்த நபரை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது திருட்டு சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து கால்வாய் கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் பணமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் வத்தளை நடைபாதை பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் இடம்பெற்றுள்ளது.
கைதான நபர் மொரட்டுவ பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.