தேசிய எரிபொருள் அட்டை முறைமை தொடர்பாக எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு! ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பம்..
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 481 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையை பயன்படுத்துவதாக எரிசக்தி அமைச்சு தொிவித்திருக்கின்றது.
409 சிபெட்கோ நிரப்பு நிலையங்கள் மற்றும் 72 ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய எரிபொருளை விநியோகித்து வருகின்றன.
இதன்படி 158,208 வாகனங்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக இதுவரை 4,296,950 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்
எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.