பல வாகனங்களை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களும் தேசிய எரிபொருள் அட்டை பெறலாம்! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...
பல வாகனங்களை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் தேசிய எரிபொருள் அட்டை பெறுவதற்கு தமது வர்த்தக பதிவு எண்ணை பயன்படுத்தி அனைத்து வாகனங்களுக்கும் அட்டையினை பெறலாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.