SuperTopAds

நுகர்வோர் அதிகார சபை ஊழியர்களின் அதிகாரத் துஸ்பிரயோகம்

ஆசிரியர் - Editor III
நுகர்வோர் அதிகார சபை ஊழியர்களின் அதிகாரத் துஸ்பிரயோகம்

அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் அதிகாரசபை ஊழியர்கள் தங்களின் பதவியினை காட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக எரிபொருள் நிரப்பிச் செல்வதாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருவதாவது தங்களின் பதவி அடையாள அட்டை மற்றும் அலுவலக முத்திரை பொறிக்கப்பட்ட அங்கியுடன் நேற்று கல்முனை எரிபொருள் நிரப்பு  நிலையமொன்றில் தங்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கூறி இரண்டு மூன்று முறை வெவ்வேறு வாகனக்களை திரும்பத்திரும்ப கொண்டு வந்து வாகங்களில் எரிபொருள் நிரப்பிய போது பொதுமக்களால் கூச்சலிடப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றய தினம் 25.07.2022 இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் தொடர்பில் தெரியவருதாவது அவர்கள் வெளி மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவர்கள் அம்பாறை மாவட்ட எல்லைக்குள் கடமை மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிய வந்தது. இதனை அடுத்து குறித்த அதிகாரிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவ்விடத்தில் வரிசையில் நின்ற பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சீ. சீ. ரீவி உதவியுடன் குறித்த நபர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிக் கொணர முன்வருவதாகவும் உறுதி அளித்தார். 

இவ்வாறான அதிகாரிகளினாலே இந்நாடு எதிர்நோக்கும் இந்நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்று..எனவே இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கருத்துமாகும்.