SuperTopAds

நாட்டில் மீண்டும் முக கவசம் நடைமுறைக்கு வருகிறது..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மீண்டும் முக கவசம் நடைமுறைக்கு வருகிறது..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் மீண்டும் முக கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பரிந்துரை வெளியிட்டிருக்கின்றது. 

இதன்படி வெளியக பொது இடங்கள் மற்றும் உள்ளக பொது இடங்களில் முக கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக,

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணரத்ன கூறியிருக்கின்றார். 

மேலும், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிந்து செல்ல பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறினார்.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முக கவசம் அணிவது தொடர்பான பரிந்துரைகள் திருத்தப்பட்டுள்ளதாக 

அவர் மேலும் கூறினார்.