இராணுவத்திடமிருந்து பறித்துச் செல்லப்பட்டதாக நம்பபடும் இரு துப்பாக்கிகள் மீட்பு..!
பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின்போது பறித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இரு துப்பாக்கிகள் தியவன்னாவ பாலத்திற்கு கீழ் இருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரிடம் இருந்து பறித்துச் சென்ற ஆயுதங்களாக இருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது.