தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை பிற்போடப்பட்டது! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...
நாடு முழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை பிற்போடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதால், இன்று முன்னோடித் திட்டமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.