SuperTopAds

ஜனாதிபதி தலைமையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை..! விநியோகத்தை துரித்தப்படுத்த பணிப்பு, கல்வி - விவசாயம் - கடற்றொழில் குறித்து அதிக கவனம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தலைமையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை..! விநியோகத்தை துரித்தப்படுத்த பணிப்பு, கல்வி - விவசாயம் - கடற்றொழில் குறித்து அதிக கவனம்..

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார். 

எாபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த உத்தரவினை வழங்கியிருக்கின்றார். 

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள், கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், மற்றம் சுற்றுலாத்துறையினர், பொதுப் போக்குவரத்து துறையினருக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஆராயப்பட்டது. 

இதன்போது பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சிற்றுார்ந்துகளுக்கு நாடு முழுவதும் உள்ள இ.போ.ச சாலைகள் ஊடாக வழங்குமாறும், 

மற்றைய துறைகளுக்கு வழங்கமான வழங்கலை துரிதகதியில் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார். நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 

மீள ஆரம்பிக்கும்போது, மாணவர்களுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதியினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.