ஜனாதிபதி செயலகம் - கோட்டா கோகம போராட்டக்களம் ஆகியவற்றுக்குள் புகுந்தது இராணுவம்..! கொழும்பில் உச்ச பதற்றம்...
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்குள் இராணுவம் புகுந்துள்ளது.
“கோட்டா கோகம” போராட்ட இடத்தில் இருந்தவர்கள் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளனர்.
இருந்தபோதும் அந்த பகுதி முற்றாக இராணுவம் மற்றும் அதிரடிப்படை, பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றது.
மிக பெருமளவு இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்துள்ளனர். நள்ளிரவு தாண்டி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தி வெளியேற்றப்படுவதையும் கமராக்கள் தட்டி விடப்படுவதையும்
அவதானிக்ககூடியதாக உள்ளது.