SuperTopAds

ஜனாதிபதி பதவியேற்பின்போது மின்தடை..! உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி பதவியேற்பின்போது மின்தடை..! உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு பணிப்பு..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பின்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்டிருந்த மின்தடை தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளது. 

8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு விழாவை சுயாதீன தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி சிவப்புக் கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும்போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தொலைக்காட்சி சேவைகளில் நேரடி ஒளிபரப்பு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.