SuperTopAds

போராட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
போராட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் எச்சரிக்கை..!

ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயல் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

எனவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.