113 க்கும் அதிகமானோர் டலஸ் அழக பெருமளவுக்கு ஆதரவு தொிவித்தனர், ஆனால் நாடாளுமன்றில் நடந்தது வேறு, சுமந்திரன் அதிர்ச்சி..
டலஸ் அழகபெருமவுக்கு ஆதரவாக சுமார் 113க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அப்படி இருக்க இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
தனது சமூக வலைத்தள பக்கத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
மக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் தொடர்ந்தும் இருப்பது இன்றும் நிரூபணமாகியிருக்கிறது.
இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதாகவும் கூறினார்.
இன்று அநுர குமார திசாநாயக முக்கிய கருத்தொன்றை கூறினார் டலஸ் அளகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகமானது.
அப்படியானால் என்ன நடந்தது???’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.