காலி முகத்திடலில் உச்ச பாதுகாப்பு! பதற்றமான சூழலில் காலிமுகத்திடல்..
காலி முகத்திடல் போராட்ட களத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்பகுதியில் உள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் உருவச் சிலையை சூழவுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.