நாளை நாடாளுமன்றில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு..!
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளை 21ம் திகதி காலை பதவியேற்கவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகிய பின்னர் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது சுமார் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார்.
இதனையடுத்து நாளை நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.