SuperTopAds

தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களின் ஆதரவுடனும் ரணில் வெற்றி பெறுவார்..! ஹரின் உறுதி..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களின் ஆதரவுடனும் ரணில் வெற்றி பெறுவார்..! ஹரின் உறுதி..

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார். என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார். 

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள போதிலும், 

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவார் எனவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டார்.