தேசிய எரிபொருள் அட்டை 21ம் திகதி நடைமுறைக்கு வருகிறது, 25ம் திகதியே நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது! அமைச்சர் அறிவிப்பு...
நாடு முழுவதும் இன்று மாலை 4 மணிக்குள் சுமார் 2 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அட்டைக்கான QR பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
இதன்படி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துடன் ஜூலை 21ம் திகதி தொடக்கம் 24ம் திகதிவரை கொழும்பில் பல இடங்களில் QR குறியீடு திட்டம் பரீட்சிப்பு நடத்தப்படும்.
பின்னர் இந்த QR திட்டம் ஜூலை 25ம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலான திகதி ஒழுங்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி 0,1,2 - செவ்வாய் & சனி 3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு 6,7,8,9 - திங்கள், புதன் & வெள்ளி ஆகிய தினங்களாகும். மேலும் ஜூலை 21-24 தேதிகளில் கொழும்பில் பல இடங்களில் QR குறியீடு சோதிக்கப்படும்.
எனவும் அமைச்சர் அமைச்சர் காஞ்சனா விஜசேகர கூறியுள்ளார்.