SuperTopAds

குழந்தையின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கு சென்ற தந்தையிடம் இறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கான படிவத்தை கொடுத்த பிரதேச செயலகம்! யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor I
குழந்தையின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கு சென்ற தந்தையிடம் இறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கான படிவத்தை கொடுத்த பிரதேச செயலகம்! யாழ்ப்பாணத்தில்...

பிள்ளையின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பதிவு செய்ய சென்றிருந்த நபருக்கு இறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கான படிவம் வழங்கப்பட்டு அதில் தரவுகளை நிரப்புமாறு கூற்ட்டுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, 

தனது பிள்ளை ஒன்றின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் தொலைந்த நிலையில் அதனை மீள எடுப்பதற்காக யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றுக்கு குறித்த பிள்ளையின் தந்தை சென்றுள்ளார்.

அங்கு கடமையில் இருந்த உத்தியோத்தர் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்குவதற்கான படிவம் முடிவடைந்ததாகவும் நாட்டில் தற்போது காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் 

தம்மிடம் உள்ள இறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவதற்கான படிவத்தில் பிறப்பு என எழுதி விடையங்களை குறிப்பிட்டு தருமாறு இறப்பு விண்ணப்ப படிவத்தை வழங்கியுள்ளார்.

இதனால் குழப்பம் அடைந்த குறித்த தந்தை தனது பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் எடுப்பதற்கு இறப்பு விண்ணப்ப படிவத்தை மாற்றி நிரப்ப வேண்டிய தேவையில்லை எனக் குறிப்பட்டார்.

இதன் போது குறுக்கிட்ட உத்தியோத்தர் நாட்டில் காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் நாம் என்ன செய்வது என கூறினார். இதன் போது பதலளித்த குறித்த பிள்ளையின் தந்தை 

அவ்வாறு தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிந்திருந்தால் ஒரு விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து வைத்திருந்து எல்லோருக்கும் விநி யோகித்திருக்கலாம் தானே எனக்கூறி 

இறப்பு விண்ணப்ப படிவத்தை நிராகரித்து சென்றுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது 

காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிப்பது தொடர்பில் தாம் சிரமத்தை எதிர் நோக்குகின்ற நிலையில் குறித்த விடையம் தொடர்பில் 

மாற்று ஒழுங்கை சிபாரிசு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.