4 வயது மகளை சித்திரவதை செய்து அதனை வீடியோ பதிவு செய்து மனைவிக்கு அனுப்பிய தந்தை கைது..!
தனது மகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
சிறுமியின் பாட்டி சிறுவனர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் மட்டக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 4 வயதும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுமியே சித்திரதவதை செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபருக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு இருந்துள்ளது. அதனால் சிறுமியின் தாய் குழந்தையை பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கும் சென்றுள்ளார். இது நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் சந்தேகநபர் சிறுமியை வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார்.
வீட்டில் வைத்து சிறுமியை சித்திரவதை செய்து அதனை மனைவிக்கு வீடியோ பதிவாக அனுப்பியிருக்கின்றார்.
குறித்த விடயம் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. தற்போது சிறுமியை மீட்டுள்ள பொலிலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.