பேருந்து நிலையத்தில் கிடந்த சூட்கேஸினால் பீதி..! இறுதியில் புஸ்வாணமானது..
அட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியுள்ளது.
நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது.
பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து,
அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசமாக மாற்றினர்.
அதையடுத்து, வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபடும் போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில்,
பயணி ஒருவர் குறித்த சூட்கேஸ்சை விட்டுச் சென்றுள்ளதாகவும், குறித்த சூட்கேஸ்சில் ஏராளமான பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி சூட்கேஸை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அட்டன் நகரம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடதக்கது.