எரிபொருள் அட்டை பெறுவதற்காக பாடத பாடுபடும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்ட ஆசிரியர்கள்! மாகாண கல்வி அமைச்சு அசண்டை..
வெளிமாவட்டத்தில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் யாழ்.மாவட்டத்திலேயே எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இலகுவான வழியை கையாளும்படி யாழ்.மாவட்டச் செயலர் எழுதிய கடிதத்தை மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஏற்கமறுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேலும் தொிவித்துள்ளதாவது,
தற்போது யாழ்பாணத்தில் தாங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு தமது திணைக்களத் தலைவரின் உறுதிப்படுத்தல் பெற வேண்டும்.
இது யாழ்.மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் பங்கீட்டு அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது திணைக்களத் தலைவரின் கையெழுத்தை பெறுவதற்காக தாம் கடமையாற்றும் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த நெருக்கடி நிலையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் தமது சேவை தொடர்பாக மேலதிகாரிகளில் யாராவது ஒருவரிடம் உறுதிப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடையதானங்களை உள்ளடக்கிய கடிதமும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையெழுத்துடன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பபட்டிருந்தது.
எனினும் குறித்த கடிதம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு சென்றபோது உரிய அதிகாரிகள் செயல்படுத்த பின்னாடித்து வருவதாக ஆசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.