ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை..!
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றில் இடம்பெறவிருக்கும் நிலையில் அதற்கு இடையூறு விளைவிப்பதற்கும், அரச கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கும் இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது. என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்களை நடத்துவதற்கோ இடையூறாக இருக்காதீர்கள்.
ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
எப்பொழுதும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியிருந்தாலும், முடிந்தவரை துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் அவர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளோம்.
என்று பதில் ஜனாதிபதி மேலும் கூறினார்.