20ம் திகதி தொடக்கம் தேசிய எரிபொருள் அட்டைக்கு மட்டுமே எரிபொருள்..! இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்..
நாடு முழுவதும் நாளை மறுதினம் 20ம் திகதி தொடக்கம் தேசிய எரிபொருள் அட்டைக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தொிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதை 20ம் திகதிவரை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.