அரசுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டுகளை திருடியவர் கைது! 50 கண்ணீர் புகைக்குண்டுகளுடன், பொலிஸார் அதிர்ச்சி தகவல்..
நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின்போது பொலிஸாரிடமிருந்து திருடிய 50 கண்ணீர் புகைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஒபேசேகரபுர என்ற இடத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் கடந்த 13ம் திகதி நாடாளுமன்ற சுற்றாடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸாரை தாக்கியதாகவும்,
அவர்களிடமிருந்து கண்ணீர் புகைக்குண்டுகள் உள்ளிட்டவற்றை திருடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபரிடம் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.