36 நாட்களாக எரிபொருள் இல்லை என கூறப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 25 லீற்றர் பெற்றோல் எடுத்து சென்ற முகாமையாளருக்கு நடந்த தரமான சம்பவம்..!
36 நாட்களாக எரிபொருள் இல்லை என கூறப்பட்டு மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்ப நிலையத்திலிருந்து 25 லீற்றர் பெற்றோலை எடுத்துச் சென்ற எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பேருவளை மக்கோன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 36 நாட்களாக எரிபொருள் இல்லை. என கூறப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்துள்ளது.
இவ்வாறான நிலையில் மின்சாரம் தடைப்பட்டிருந்தபோது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் பிளாஸ்டிக் கொள்கலனில் சுமார் 25 லீற்றர் பெற்றோலை நிரப்பி அதனை உரைப்பை ஒன்றில் மறைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது கையும் களவுமாக பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருளே இவ்வாறு எடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியிருக்கின்றனர்.