SuperTopAds

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு, 19ம் திகதி வேட்புமனு தாக்கல், 20ம் திகதி முடிவு அறிவிப்பு..! ரணில்/சஜித்/அனுர/டளஸ் களத்தில்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு, 19ம் திகதி வேட்புமனு தாக்கல், 20ம் திகதி முடிவு அறிவிப்பு..! ரணில்/சஜித்/அனுர/டளஸ் களத்தில்..

நாடாளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் 19ம் திகதி புதிய ஜனாதிபதி தொிவுக்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் எடுக்கப்படவுள்ளது. 

இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய சபை அமர்வில் சில முக்கிய விடயங்களை அறிவித்தார்.

அதன்படி,பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும். 

வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யுமிடத்து ,

 20 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும். மாறாக ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் 19 ஆம் திகதி சபை அமர்விலேயே குறித்த உறுப்பினரின் பெயர் 

வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவதாக என்னால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும். இதேவேளை தற்போது அனுரகுமார திஸநாயக்க, சஜித் பிறேமதாஸ, மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் 

மற்றும் டளஸ் அழக பெரும ஆகியோர் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இன்றையதினம் பாராளுமன்றைச் சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டு 

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு நிமித்தம் பாராளுமன்றத்திற்கு செல்லும் இரு பிரதான வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்ககது.