SuperTopAds

மஹிந்த, பஸிலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை!

ஆசிரியர் - Editor I
மஹிந்த, பஸிலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை!

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதி பெறாமல் நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, 

விஜித் மலல்கொட மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.