SuperTopAds

ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்த எவருக்கும் இடமில்லை..! பதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தி..

ஆசிரியர் - Editor I
ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்த எவருக்கும் இடமில்லை..! பதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தி..

போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வன்முறைக்கு இடமளிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 

இன்று பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது உரையாற்றிய அவர், ” நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம்.

எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.அதிமேதகு’ என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன். 

( ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை)நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன். அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட தயாரில்லை.

அடுத்த வாரம் தெரிவாகும் புதிய ஜனாதிபதிக்கு ’19’ ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும்.போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது. 

போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.

நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.