SuperTopAds

வன்முறை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுங்கள்! பலத்தை பயன்படுத்துவோம், இராணுவம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
வன்முறை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுங்கள்! பலத்தை பயன்படுத்துவோம், இராணுவம் எச்சரிக்கை..

பொதுமக்கள், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டரீதியான உரித்து இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.