நாங்கள் வெளிநாட்டுக்கு போகமாட்டோம்! ராஜபக்ஸக்கள் நீதிமன்றுக்கு வழங்கிய உறுதி..
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் நாளை வரையில் வெளிநாடு செல்லமாட்டார்கள் என சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றிற்கு உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் போது, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.