ஐனாதிபதி தனது பொறுப்புக்கள் / கடமைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாட்டில் இல்லாத நிலையில் தனது அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஐனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கும் வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.