SuperTopAds

கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் மூச்சு திணறி இளைஞன் மரணம்! பிரதமர் அலுவலக சுற்றாடலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் மூச்சு திணறி இளைஞன் மரணம்! பிரதமர் அலுவலக சுற்றாடலில் சம்பவம்..

கண்ணீர் புகைகுண்டு பிரயோகத்தில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்றைய தினம் கொழும்ப - பிளவர் வீதியில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது பொலிஸார் சரமாரியான கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் நடத்தியிருந்தனர். 

இதில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.