SuperTopAds

நாட்டு மக்களிடம் பாதுகாப்ப படைகளின் பிரதானி விடுத்துள்ள கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களிடம் பாதுகாப்ப படைகளின் பிரதானி விடுத்துள்ள கோரிக்கை..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படும் காலம்வரை மக்கள் விசேடமாக இளைஞர்கள் அமைதியாக இருக்கும்படி பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் கோரிக்கை விடுத்துள்ளார். 

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சற்றுமுன் ஊடகங்களை சந்தித்துள்ளனர். இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறகையில், நாட்டில் ஸ்திரமான நிலையேற்படும் வரையில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அமைதியாக இருக்கவேண்டும். 

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்ககூடாது, முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவும் அவர் கூறியுள்ளார்.