பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள்! இராணுவம் குவிப்பு, 24 போராட்டக்காரர்கள் காயம், உச்ச பதற்றத்தில் கொழும்பு..
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
அதேவேளை பிரதமர் அலுவலகத்தின் அருவில் இடம்பெற்ற மோதலல் 24 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமர் பதவி விலகவேண்டும் எனக்கோரி
போராட்டம் நடத்தியவர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் பிரதமர் அலுவலகத்தை சூழ பெருமளவு இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.