SuperTopAds

தப்பி ஓடினார் பஸில் ராஜபக்ஸ..! டுபாயில் இருந்து அமொிக்கா செல்கிறார், சர்வதேச ஊடகங்கள்..

ஆசிரியர் - Editor I
தப்பி ஓடினார் பஸில் ராஜபக்ஸ..! டுபாயில் இருந்து அமொிக்கா செல்கிறார், சர்வதேச ஊடகங்கள்..

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ இன்று அதிகாலை 3.15 மணிக்கு டுபாய் செல்லும் விமானத்தின் மூலம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

டுபாய் சென்றுள்ள பஸில் ராஜபக்ஸ அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரியவருகிறது. பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை 3.15 மணிக்கு டுபாய் செல்லவிருந்த நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனினும் மீண்டும் இன்று அதிகாலை விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.