இராஜினாமா கடிதம் கிடைத்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை..! சபாநாயகர் கூறுகிறார்..
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளார்.
இன்றைய தினம் பதவி விலகுவதாக கடந்த 9ம் திகி ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார். அதற்கமைய சபாநாயகருக்கு இன்று இராஜினாமா கடிதம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.