ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதை உறுதிசெய்த விமானப்படை! விமானம் வழங்கியது எப்படி எனவும் விளக்கம்..
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய, அரசாங்கம் மற்றும் பாதுகாப்ப அமைச்சு அனுமதியுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு விமானம் வழங்கினோம். என இலங்கை விமானப்படை அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் விமானப் படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவரது துணைவியான முதல் பெண்மணி மற்றும் இரு பாதுகாவலர்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை மாலைதீவுக்கு புறப்படுவதற்கு விமானப் படை விமானம் வழங்கப்பட்டது.
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசின் வேண்டுகோளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் கட்டுநாயக்காவில் உள்ள அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.