SuperTopAds

கடல்வழியாக வெளியேற திட்டமிடுகிறாரா ஜனாதிபதி? மீண்டும் பரபரப்பை கிளப்பும் AFP..

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக வெளியேற திட்டமிடுகிறாரா ஜனாதிபதி? மீண்டும் பரபரப்பை கிளப்பும் AFP..

ஆகாய மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறும் திட்டம் தோல்வி கண்டுள்ள நிலையில் கடல்மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதுடன், கடற்படையின் ரோந்து படகு ஒன்றினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரவூர்வ வட்டாரங்களை மேற்மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக ராஜபக்சாக்கள் அவசரமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதால் பசில் ராஜபக்ச அங்கு தனது கடவுச்சீட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.

இதன் காரணமாக அவர் புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெறவேண்டிய நிலையேற்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

 ஒரு சூட்கேஸ் முழுவதும் ஆவணங்கள் மற்றும் 17.85 மில்லியன் ரூபாய் ஆகியவற்றையும் அந்த பங்களாவில் விட்டுச்சென்றுள்ளனர் என அதிகாரபூர்வ தரப்புகள் தெரிவித்தன. 

குறிப்பிட்ட பணம் தற்போது பொலிஸாரிடம் உள்ளது. ஜனாதிபதி எங்கிருக்கின்றார் என்பது குறித்து ஜனாதிபதி அலுவகம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

எனினும் அவர் தொடர்ந்தும் முப்படைகளின் தளபதியாக உள்ளார் அவர் பயன்படுத்துவதற்கான இராணுவ வளங்கள் உள்ளன. கடற்படை கலம் ஒன்றில் ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் வெளிநாட்டிற்கு கொண்டு செல்வது ஜனாதிபதியின் நெருங்கிய படை சகாக்கள் ஆராய்ந்துவருகின்றனர். 

என உயர் பாதுகாப்பு தரப்பொன்று தெரிவித்தது.கடல்வழியாக வெளியேறுவதே தற்போது சிறந்த தெரிவாக உள்ளது என தெரிவித்த பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதி மாலைதீவிற்கு அல்லது இந்தியாவிற்கு செல்லலாம் அல்லது விமானம் மூலம் துபாய் செல்லலாம் என குறிப்பிட்டார்.

2013 இல் திறக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் பெயர் சூட்டப்பட்ட நாட்டின் இரண்டாவது விமானநிலையமான மத்தல விமான நிலையத்திலிருந்து விமானமொன்றை அவர் வாடகைக்கு அமர்த்தி புறப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விமானநிலையம் அது பயனற்ற பெருஞ்செலவு என கருதப்படுகின்றது அங்கு சர்வதேச விமானங்கள் வருவதில்லை உலகில் மிகவும் குறைந்தளவு பயன்படுத்தப்படும் விமானநிலையங்களில் ஒன்றாக அது காணப்படுகின்றது.