தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையால் ஜனாதிபதியின் பதவி விலகல் தாமதமாகலாம் என தகவல்..!
உரிய பாதுகாப்பு இல்லாமையினால் உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் ஜனாதிபதி பதவி விலக முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இதன்படி தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் விமான நிலையம் ஊடாக பாதுகாப்பான நாட்டுக்கு செல்ல அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு இராணுவ முகாமில் கூட தங்க முடியாது.
இது உயிருக்கு அச்சுறுத்தலான விடயம் எனவே கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரத்தில் தலையிட்டு
நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.