மத்தள விமான நிலைய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு! பஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரமுகர்கள் தப்பி ஓடவுள்ளதாக வெளியான தகவலால்..
மத்தள விமான நிலையம் ஊடாக பஸில் ராஜபக்ஸ நாட்டைவிட்டு வெளியேற திட்டமிடுவதாக கிடைத்திருந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இந்த வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இன்று அதிகாலை பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்கவின் ஊடாக நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோது அங்குள்ள அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலகிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.