SuperTopAds

நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பபட்ட பஸில் ராஜபக்ஸ..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்..

ஆசிரியர் - Editor I
நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பபட்ட பஸில் ராஜபக்ஸ..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினால் பயணத்தை கைவிட்டு திரும்பியுள்ளார். 

இன்றைய தினம் காலை அதிதிகளுக்கான நுழைவாயில் வழியாக பஸில் ராஜபக்ஸ வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதுடன் பணி புறக்கணிப்பு மேற்கொண்டிருந்தனர். 

இதனால் பஸில் ராஜபக்ஸ நீண்டநேரம் விமான நிலையத்தில் காத்திருந்தார். பின்னர் சாதாரண பணிகளுக்கான வழியால் செல்ல அனுமதித்தபோதும் அங்கிருந்து பயணிகள் கடுமையாக அச்சுறுத்தியமையால் அவர் தனது பயணத்தை நிறுத்தி அங்கிருந்து நாட்டுக்குள் திரும்பியதாக

தொியவருகின்றது.