ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்..! சபாநாயகர் தொிவித்த பரபரப்பு தகவல்..
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறி அயல் நாடு ஒன்றில் தங்கியிருப்பதாக தொிவித்துள்ள சபா நாயகர் நாளை மறுதினம் புதன்கிழமை நாடு திரும்புவார். எனவும் கூறியுள்ளார்.
பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, தற்போது ஜனாதிபதி அருகில் உள்ள நாடொன்றில் உள்ளார்,
அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார் புதன்கிழமை வருவார் 13ம் திகதி அவர் பதவிவிலகுவார். அவர் என்னிடம் தான் 13ம் திகதி பதவிவிலகுவேன் என தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி அரசாங்கமே அமையவுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நான் மிகவும் கவலையடைந்தேன் அரசாங்கம் எதனையும் செய்ய விரும்பவில்லை.
துப்பாக்கி பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடவிரும்பவில்லை. எங்கள் அரசாங்கம் அவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யட்டும் என சகித்துக்கொண்டிருந்தது.
பொருளாதாரம் தவறான விதத்தில் கையாளப்பட்டுள்ளது என நீங்கள் தெரிவிப்பது ஓரளவிற்கு உண்மை, என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.