ஜனாதிபதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை சபாநாயகரே வெளியிடுவார்..!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தொடர்பான செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மட்டுமே வெளியிடுவார். என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.
இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை, முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரியப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.