SuperTopAds

விநியோக நடவடிக்கைகள் ஆரம்பம்! மின்சார பட்டியல் வைத்திருப்பது அவசியம், விலை 50 ரூபாய் அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
விநியோக நடவடிக்கைகள் ஆரம்பம்! மின்சார பட்டியல் வைத்திருப்பது அவசியம், விலை 50 ரூபாய் அதிகரிப்பு..

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் இன்று தொடக்கம் ஆரம்பித்திருக்கின்றது. 

இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளை மறுதினம் ஏனைய இடங்களுக்கும் வழங்கப்படவுள்ளது. 

அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை 

என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.