SuperTopAds

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு பதவி விலக முடியாது..! அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை, ஐ.தே.க திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு பதவி விலக முடியாது..! அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை, ஐ.தே.க திட்டவட்டம்..

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பதவி விலகுவாரா? என்ற கேள்விக்கு ஐ.தே.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன அரசியலமைப்பில் அத்தகைய சரத்து இல்லை எனவும், பிரதமர் அவ்வாறு பதவி விலக முடியாது எனவும் பதிலளித்திருக்கின்றார். 

குறித்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவி விலகுவாரா?

அரசியலமைப்பில் அத்தகைய சரத்து இல்லையல்லவா? பிரதமர் அவ்வாறு பதவி விலக முடியாதல்லவா? அரசியலமைப்புக்கு அமையவே நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பாரா? 

அரசியலமைப்பை சீர்குலைக்குமாறு நீங்கள் யோசனை முன்வைக்கிறீர்கள் அதனை செய்ய முடியாது. 

தாம் பதவி விலக தயார் என அவர் கூறியுள்ளாரல்லவா?

இல்லை ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டமைக்கு நான் கவலையடைகிறேன். அரசியலமைப்பின் 37 வது சரத்தில் இது எழுதப்பட்டுள்ளது, 

நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஏற்படும்போது ஸ்த்திர நிலையினை ஏற்படுத்த 37.1, 37.2 ஆகிய சரத்துக்கள் எழுதப்பட்டுள்ளது. 

அதனை பாகிஸ்த்தான், ரஸ்யா பயன்படுத்தியுள்ளது. இலங்கையும் பயன்படுத்தவேண்டும் என்றார்.