லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! அதிகபட்ச செயற்திறனுடன் நாடு முழுவதும் விநியோகம்..
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகபட்ச செயற்திறனுடன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தொிவித்திருக்கின்றார்.
இதற்காக, திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகளை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றும் நேற்று முன்தினமும் லங்கா IOC நிறுவனம், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கவில்லை.
திட்டமிடப்பட்ட போராட்டங்களைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றதாக கடந்த 8 ஆம் திகதி மனோஜ் குப்தா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த நாட்களைப் போன்று, நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.