பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! பொலிஸாருக்கு உத்தரவு, zoom ஊடாக பொலிஸார் ஆலோசனை..
ஐனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்துமாறு மேல்மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேல்மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் இன்று (10 ம் திகதி) மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளையும் சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கொழும்பின் பாதுகாப்பை மீண்டும் பாதுகாப்பு வீதித் தடைகளுடன் பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து இந்த உத்தரவுகளை வழங்குவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.