SuperTopAds

ஐனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்தை அமைச்சர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க தரகர் வேலை பார்த்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி!

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்தை அமைச்சர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க தரகர் வேலை பார்த்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி!

ஐனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1 கோடியே 75 லட்சம் ரூபாய் பணத்தை அமைச்சர் ஒருவருக்கு வழங்கும்படி பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் விடுத்த கோரிக்கையை கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஐனாதிபதி மாளிகையை கைப்பற்றியபோது குறித்த பணம் மீட்கப்பட்டு ஜனாதிபதி மாளிகையில் கடமையாற்றிய சிறப்பு அதிரடிப்படையின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஷேதா பெர்னாண்டோவிடம் பணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் நிலையத்தில் கையளிக்கப்பட்டது. அந்தத் தொகையை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை அந்தத் தருணத்தில் நிலைய பொறுப்பதிகாதியான தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே தயாரித்துள்ளார்.

பணம் கிடைத்த இடத்திற்கு உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி அந்த இடத்தை படம் பிடித்து பணத்தை ஒப்படைத்தவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளார்.

இதன்பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவரிடம் அந்த பணத்தை ஒப்படைக்கும்படி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தரகர் வேலை பார்த்துள்ளார்.

எனினும் மீட்கப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை தாம் செய்துள்ளதால் பணத்தை அபகரிக்க முடியாது என கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட மூத்த பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த தொகை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை எவருக்கும் வழங்க மாட்டோம் எனவும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட மூத்த பொலிஸ் அதிகாரியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.